ஷேக்ஸ்பியர்
முழு உலகமும் ஒரு நாடக மேடை. அதில் ஆண்களும் பெண்களும் வெறும் நடிகர்கள். அந்த நாடக மேடையில் அவர்கள் தோன்றி மறைபவர்கள். ஒருவர் தனது வாழ்நாளில் பல பாத்திரங்களை ஏற்று நடிப்பவர். அவர் வாழ்வு ஏழு காட்சிகள் கொண்டது. முதலாவது காட்சியில் அவர் தேம்பியழுது செவிலியின் கைகளில் வாந்தியெடுக்கும் குழந்தை. இரண்டாவது காட்சியில் அவர் சிணுங்கியழும் பள்ளிச்சிறுவர். ஒளிவீசும் தளிர்முகத்துடன் ஏட்டுப்பொதி சுமந்து தனது விருப்பத்துக்கு மாறாக நத்தைபோல் நகர்ந்து பள்ளிசெல்பவர். மூன்றாவது காட்சியில் அவர் காதலர். தன் காதலியின் புருவங்களை நினைந்துருகி கவிதை எழுதுந்தோறும் வெஞ்சூளை போல் கனன்று புகைக்கும் காதலர். நாலாவது காட்சியில் அவர் படைவீரர். அந்நிய வசவுகள், ஆட்டுத்தாடி, தன்மானம் காக்கும் வேட்கை, சண்டைக்கு முந்தும் சுபாவம், களம்புகுந்து அஞ்சாநெஞ்சுடன் பீரங்கிமுன் பாய்ந்து நீர்க்குமிழி எனத்தக்க புகழுக்கு ஏங்கும் ஆசை மிகுந்தவர். ஐந்தாவது காட்சியில் அவர் நீதிமான். இலஞ்சம் வாங்கி இதம்படக் கொழுத்த வயிறு, கண்டிப்பு மிகுந்த கண்கள், பிறர் மதிக்கும் வண்ணம் கத்தரித்த தாடி, மதிநுட்பமான வாய்ப்பிறப்புகள், சமயோசிதமான குறுங்கதைகளின் உறைவிடம். ஆறாவது காட்சியில் அவர் முதிர்ந்து மெலிந்த பேர்வழி. காலில் செருப்பு, மூக்கில் கண்ணாடி, அரையில் காசுமுடிச்சு, இளமையில் அணிந்த காலுறை இப்பொழுது இளகிவழுகும் வண்ணம் வாடிவறண்ட கால். அன்று ஓங்கி முழங்கிய குரல் இன்று அற்பசொற்ப கீச்சொலியாய் மங்கி அமுங்கிய நிலை. ஏழாவது காட்சியில், அதாவது இந்நூதன நிகழ்வுகளுடன் கூடிய வரலாற்றின் இறுதிக் கட்டத்தில் எங்கள் காவியநாயகர் பற்களும், பார்வையும், நாட்டமும் இழந்தவராய், அனைத்தையும் களைந்தவராய், அசதி மிகுந்தவராய் தனது இரண்டாவது பிள்ளைப் பராயத்துள் நுழைவதையே நாம் காண்கிறோம்.
ALL THE
WORLD’S A STAGE
Shakespeare
All the
world’s a stage,
And all the
men and women merely players.
They have
their exits and their entrances,
And one man
in his time plays many parts,
His acts
being seven ages. At first the infant,
Mewling and
puking in the nurse’s arms.
Then the
whining schoolboy with his satchel
And shining
morning face, creeping like snail
Unwillingly
to school. And then the lover,
Sighing
like furnace, with a woeful ballad
Made to his
mistress' eyebrow. Then a soldier,
Full of strange
oaths and bearded like the pard,
Jealous in
honor, sudden and quick in quarrel,
Seeking the bubble reputation
Even in the cannon’s mouth. And then the justice,
In fair round belly with good capon lined,
With eyes severe and beard of formal cut,
Full of wise saws and modern instances;
And so he plays his part. The sixth age shifts
Into the lean and slippered pantaloon
With spectacles on nose and pouch on side,
His youthful hose, well saved, a world too wide
For his shrunk shank, and his big manly voice,
Turning again toward childish treble, pipes
And whistles in his sound. Last scene of all,
That ends this strange eventful history,
Is second childishness and mere oblivion,
Sans teeth, sans eyes, sans taste, sans everything.
MODERN TEXT
The whole world is a stage, and all the men and women
merely actors. They have their exits and their entrances, and in his lifetime a
man will play many parts, his life separated into seven acts. In the first act
he is an infant, whimpering and puking in his nurse’s arms. Then he’s the
whining schoolboy, with a book bag and a bright, young face, creeping like a
snail unwillingly to school. Then he becomes a lover, huffing and puffing like
a furnace as he writes sad poems about his mistress’s eyebrows. In the fourth act,
he’s a soldier, full of foreign curses, with a beard like a panther, eager to
defend his honor and quick to fight. On the battlefield, he puts himself in
front of the cannon’s mouth, risking his life to seek fame that is as fleeting
as a soap bubble. In the fifth act, he is a judge, with a nice fat belly from
all the bribes he’s taken. His eyes are stern, and he’s given his beard a
respectable cut. He’s full of wise sayings and up-to-the-minute anecdotes:
that’s the way he plays his part. In the sixth act, the curtain rises on a
skinny old man in slippers, glasses on his nose and a money bag at his side.
The stockings he wore in his youth hang loosely on his shriveled legs now, and
his bellowing voice has shrunk back down to a childish squeak. In the last
scene of our play—the end of this strange, eventful history—our hero, full of
forgetfulness, enters his second childhood: without teeth, without eyes,
without taste, without everything.
Shakespeare, As You Like It, 2-7, No Fear Shakespeare, தமிழ்: மணி வேலுப்பிள்ளை
No comments:
Post a Comment