புதைகுழி

 The earth will dry on my grave


The earth will dry on my grave
And you, my own mother, will forget me.
Grave grass will grow over the graveyard
And will deaden your grief, my old father.
The tears will dry in my sister’s eyes
And sorrow will fly from her heart.
But you, my elder brother, will not forget me
Till you have avenged my death.
You, my second brother, will not forget me
Till you lie by my side.
Bullet, you are hot and the bearer of death,
But were you not my faithful slave?
Black earth, you will cover me,
But did I not trample you
Beneath my horse’s hoofs?
Death, you are cold,
But I was your master.
The earth shall take my body,
And heaven my soul.

A Chechen song quoted by a character in Hadji Murat,
a story by Tolstoy (Master and Man and other stories,
Penguin Books, 1977, translated from Russian to English
by Paul Foote, p.239).

என் புதைகுழி மண்ணும் உலர்ந்துவிடும்

என் புதைகுழி மண்ணும் உலர்ந்துவிடும்
அதை புல்லும் மூடி வளர்ந்துவிடும்
என்னை, அம்மா, நீயும் மறந்திடுவாய்
அப்பா துயரும் அடங்கிவிடும்
தங்கையின் விழியும் வரண்டுவிடும்
அவள் இதயம் துயரை இழந்துவிடும்.
எனினும்,
அண்ணா, என்னை மறக்கமாட்டாய்;
என் சாவுக்கு 
பழிவாங்கத் தவறமாட்டாய்;
தம்பியும் என்னை மறக்கமாட்டாய்,
என்னருகில் நீ சாயும்வரை.

சுடச்சுட வேகிப் பாய்ந்து
சாவை ஏந்தும் சன்னங்களும்
என்னைத் தழுவிய அடிமைகளே!
என்,
குழியில் கவியும் கருமண்ணே,
குதிரைக் குளம்பால் உதைத்து 
உன்னை மிதிக்கவில்லையா நான்?  
உடலை மரக்கச்செய்யும் சாவே,
உனக்கும் எசமான் நான் அல்லவா?
இனி என்,
உடலை மண்ணே நுகர்ந்திடுவாய்!
உயிரை விண்ணே கவர்ந்திடுவாய்!

தமிழ்: மணி வேலுப்பிள்ளை.

No comments:

Post a Comment