ஹிப்பொகிரட்டிஸ் சூளுரை
பொ. ஊ. மு. 460-370
எனது ஆற்றலுக்கும் நிதானத்துக்கும் எட்டியவரை இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன் என்று நான் சூளுரைக்கிறேன்:
நான் அடியொற்றி வந்துள்ள வைத்தியர்கள் பாடுபட்டு எய்திய அறிவியற் பேறுகளுக்கு மதிப்பளித்து, அத்தகைய அறிவை என்னுடையதாகக் கொண்டு, என்னை அடியொற்றி வரவுள்ளோருடன் நான் பகிர்ந்து மகிழ்வேன்.
நோய்வாய்ப்பட்டோரின் நன்மை கருதி, மட்டுமீறிய சிகிச்சை மற்றும் சிகிச்சையில் ஐயுறவு எனும் இரட்டைப் பொறிகளைத் தவிர்த்து, வேண்டிய பரிகாரங்கள் அனைத்தையும் நான் கைக்கொள்வேன்.
அறிவியலலில் ஈடுபடுவது போலவே மருத்துவத்தில் ஈடுபடுவதும் ஒரு கலை என்பதையும், அறுவை மருத்துவரின் கத்தியை விடவும் அல்லது வேதியரின் மருந்தை விடவும் கனிவும் பரிவும் புரிவும் மேலானவை என்பதையும் நான் நினைவில் வைத்திருப்பேன்.
“எனக்குத் தெரியாது” என்று கூற நான் வெட்கப்படவும் மாட்டேன்; ஒரு நோயாளர் குணமடைவதற்கு மற்றோரின் திறன்கள் தேவைப்படும்பொழுது, எனது சகபாடிகளை அழைக்கத் தவறவும் மாட்டேன்.
எனது நோயாளர்களின் சுகயீனங்கள் மற்றவர்களிடம் அறிவிக்கப்படுவதற்காக என்னிடம் தெரிவிக்கப் படவில்லை;
ஆதலால் எனது நோயாளர்களின் அந்தரங்கத்துக்கு நான் மதிப்பளிப்பேன்.
உயிராபத்துக்கு இடமான நிலைமைகளில் நான் கருத்தூன்றிச் செயற்படுவது மிகவும் முக்கியம். எனக்கு ஓர் உயிரைக் காப்பாற்றும் பேறு கிடைத்தால், முற்றிலும் நன்றி பாராட்டுவேன். அதேவேளை ஓர் உயிர் பிரிவதற்கும் நான் காரணமாதல் கூடும். இந்த மகத்தான பொறுப்பினை மிகுந்த பணிவுடனும், எனது பலவீனம் பற்றிய எச்சரிக்கை உணர்வுடனும் நான் எதிர்கொள்ள வேண்டும்.
எல்லாம் வல்லவர் போல் நான் நடக்கக் கூடாது என்பது ஏனைய எல்லாவற்றையும் விட மிகவும் முக்கியமானது.
ஒரு காய்ச்சல் சட்டகத்துக்கோ, புற்றுநோய்க் கட்டிக்கோ அல்ல, நோய்வாய்ப்பட்ட ஒருவருக்கே நான் சிகிச்சை அளிக்கிறேன் என்பதையும், அவரது சுகயீனம் அவரது குடும்பத்தையும் பொருள்வளத்தையும் பாதிக்கக் கூடும் என்பதையும் நான் நினைவில் வைத்திருப்பேன். நோயாளருக்கு நான் போதிய சிகிச்சை அளிக்க வேண்டியவிடத்து அவருடன் தொடர்புடைய இப்பிரச்சனைகளுக்கும் நான் பொறுப்பேற்கிறேன்.
நோயைக் குணப்படுத்துவதை விட, அதனைத் தடுப்பதே சிறந்தது; ஆதலால் என்னால் இயன்ற வேளைகளில் எல்லாம் நான் நோயை தடுத்து நிற்பேன்.
உளநலம், உடனலம் வாய்ந்தோர் மற்றும் தளர்ச்சி அடைந்தோர் உட்பட எனது சக மனிதர்கள் அனைவருக்கும் விசேட கடப்பாடுகள் கொண்ட ஒருவராக நான் சமூகத்தில் அங்கம் வகிக்கிறேன் என்பதை நினைவில் வைத்திருப்பேன்.
இச்சூளுரையை நான் மீறவில்லை என்றால், வாழ்வையும் கலையையும் துய்ப்பேனாக; மதிக்கப்படுபவராக வாழ்வேனாக; அதன்பிறகு வாஞ்சையுடன் நினைக்கப்படுவேனாக.
எனது பணியின் செவ்விய மரபுகளைப் பேணும் வண்ணம் செயற்படுவேனாக; எனது உதவியை நாடுவோரைக் குணப்படுத்தும் இன்பத்தை நெடுங்காலம் துய்ப்பேனாக.
The
Hippocratic Oath
I
swear to fulfill, to the best of my ability and judgment, this covenant:
I
will respect the hard-won scientific gains of those physicians in whose steps I
walk, and gladly share such knowledge as is mine with those who are to follow.
I
will apply, for the benefit of the sick, all measures [that] are required,
avoiding those twin traps of overtreatment and therapeutic nihilism.
I
will remember that there is art to medicine as well as science, and that
warmth, sympathy, and understanding may outweigh the surgeon's knife or the
chemist's drug.
I
will not be ashamed to say "I know not", nor will I fail to call in
my colleagues when the skills of another are needed for a patient's recovery.
I
will respect the privacy of my patients, for their problems are not disclosed
to me that the world may know. Most especially must I tread with care in
matters of life and death. If it is given me to save a life, all thanks. But it
may also be within my power to take a life; this awesome responsibility must be
faced with great humbleness and awareness of my own frailty. Above all, I must
not play at God.
I
will remember that I do not treat a fever chart, a cancerous growth, but a sick
human being, whose illness may affect the person's family and economic
stability. My responsibility includes these related problems, if I am to care
adequately for the sick.
I
will prevent disease whenever I can, for prevention is preferable to cure.
I
will remember that I remain a member of society, with special obligations to
all my fellow human beings, those sound of mind and body as well as the infirm.
If I do not violate this oath, may I enjoy life and art, respected while I live and remembered with affection thereafter. May I always act so as to preserve the finest traditions of my calling and may I long experience the joy of healing those who seek my help.
________________________
Translated by Mani Velupillai
2023-08-01
No comments:
Post a Comment