பெண்

இரன் பன்சோட்

 

ஆற்றுமகள் சொன்னாள் கடற்காளைக்கு:

        நானோ,

        வாழ்நாள் முழுவதும்

        கரைந்து கரைந்து

        உனக்குள் பாய்ந்தேன்,

உனக்காக.

        ஈற்றில்,

        நானே நீயானேன்.

                விண்ணின் கொடை போலவே

                பெண்ணின் கொடையும்.

                        நீயோ,

                        தொடர்ந்தும் உன் நினைவில்

                        திளைத்து வந்தாய்.

                        என்னுடன் கலந்து

                        ஆறாக மாற

                        நீ எண்ணவே இல்லையே! 

Hiran Bansode, Woman, Translated from Marathi to English by Vinay Dharwadker, Indian Love Poems, Edited by Meena Alexander, Everyman's Library, 2005, ப. 138, தமிழ்: மணி வேலுப்பிள்ளை

 

No comments:

Post a Comment