மருத்துவரின் சூளுரை

___________________________________________________________________________________

எனும் முகவரி கொண்ட

மருத்துவர்___________________________________ ______________________ஆகிய நான்,

மருத்துவத்துறைஞர் அணியில் ஓர் உறுப்பினராக அனுமதிக்கப்படும் இத்தருணத்தில்,

மானுடர்க்குப் பணியாற்ற பற்றுறுதியுடன் என்னை அர்ப்பணிக்கின்றேன்;

எனது நோயாளரின் உடல்நலத்தை கருத்தில்கொள்வதற்கே நான் முதன்மை அளிப்பேன்; எனது நோயாளரை சுரண்டுவதற்கு அல்லது துர்ப்பிரயோகம் செய்வதற்கு எனது துறைமைப்பணியை நான் பயன்படுத்த மாட்டேன்;

உளச்சான்றுடனும், கண்ணியத்துடனும், நேர்நெறியுடனும், நேர்மையுடனும் என் துறைமைப்பணியை ஆற்றுவேன்; 

என்னிடம் தெரிவிக்கப்படும் அந்தரங்க விபரங்களை, சம்பந்தப்பட்ட நோயாளர் இறந்த பின்னரும் கூட, வெளியிட மாட்டேன்;

எனது ஆசிரியர்களுக்குரிய மரியாதையையும் நன்றியையும் அவர்களுக்கு  நல்குவேன்;

மருத்துவத் துறைமைப்பணியின் மாண்பையும் உயரிய மரபுகளையும் என்னால் இயன்றவரை பேணிக்கொள்வேன்;

எனது கடமைக்கும் எனது நோயாளருக்கும் இடையே சமய, தேசிய, இன, கட்சி அரசியல், சாதி, சமூக தகுநிலைக் கணிப்புகள் எவையும் குறுக்கிட அனுமதிக்க மாட்டேன்;

நான் அச்சுறுத்தலுக்கு உள்ளானாலும் கூட, மனித உயிர்வாழ்வுக்கு, அதன் தொடக்கத்திலிருந்தே மிகுந்த  மரியாதை அளிப்பேன்; மனிதகுல விதிகளுக்கு மாறாக எனது மருத்துவ அறிவை பயன்படுத்த மாட்டேன்; 

எனது தன்மானத்தைப் பணயம் வைத்து, பற்றுறுதியுடனும், சுயேச்சையுடனும் இந்த உறுதிமொழியை கொடுக்கின்றேன்.

ஒப்பம்:_______________________

திகதி:________________________

மேற்படி சூளுரை இலங்கை மருத்துவ மன்றத்தின் பதிவாளரால் / உதவிப் பதிவாளரால் / தலைவரால் / துணைத் தலைவரால் / அமர்த்தப்பட்ட உறுப்பினரால் செய்விக்கப்பட்டது.

____________________________

பதிவாளரின் / உதவிப் பதிவாளரின் / தலைவரின் / துணைத் தலைவரின் / அமர்த்தப்பட்ட உறுப்பினரின் ஒப்பம்.

MEDICAL PRACTITIONER'S OATH

I, Dr. _____________________________________________________________

of (Address), _______________________________________________________

At the time of being admitted as a member of the medical profession,

I solemnly pledge myself to dedicate my life to the service of humanity;

The health of my patient will be my primary consideration and I will not use my profession for exploitation and abuse of my patient;

I will practise my profession with conscience, dignity, integrity and honesty;

I will respect the secrets which are confided in me, even after the patient has died;

I will give to my teachers the respect and gratitude, which is their due;

I will maintain by all the means in my power, the honour and noble traditions of the medical profession;

I will not permit considerations of religion, nationality, race, party politics, caste or social standing to intervene between my duty and my patient;

I will maintain the utmost respect for human life from its beginning even under threat and I will not use my medical knowledge contrary to the laws of humanity;

I make this promise solemnly, freely and upon my honour.

…………………….          ……………………….

Signature                                  Date

The oath was administered by the Registrar /Asst. Registrar / President / Vice President or Designated Member of the Sri Lanka Medical Council.

………………………………..

Signature of Registrar / Assistant Registrar / President / Vice-President / Designated Member of the Sri Lanka Medical Council.

________________________

Translated by Mani Velupillai

2024-09-01


No comments:

Post a Comment