சொல்லித் தெரிவதல்ல

யாரோ ஒரு கவிஞர்

 

முதலிரவு;

மன்மதக் கலையில்

இளமணமகள் காட்டிய தேர்ச்சி

அவனை

வியக்கவும் திகைக்கவும் வைத்தது.

சாய்ந்த தலையை

ஏந்திய கையுடன்

அவன் வாளாவிருந்தான்.

அவளோ,

வெறுமனே சிரித்துவிட்டு,

சுவரில் வரைந்த படம்:

பச்சிளஞ் சிங்கக் குட்டி

யானைமீது பாயும் காட்சி!

By an anonymous poet, Kamasutratranslated from Kannada to English by Velcheru Narayana Rao & David Shulman, Indian Love Poems, Edited by Meena Alexander, Everyman's Library, 2005, ப. 79, தமிழ்: மணி வேலுப்பிள்ளை

 

No comments:

Post a Comment