இரவின் இன்பங்கள் நூறு

அமாரு


இரவின் இன்பங்கள் நூறு;

அவற்றை எண்ணி எண்ணி,

பகலை ஒருவாறு வென்று,

வேட்கையுடன்,

அவள் காத்திருக்கிறாள்.

அவனும் வீடுதிரும்புகிறான்.

கூடிப்படுக்கும் வேளை

சூழ்ந்த பின்னரும் கூட

சலிக்கச் சலிக்க

கதையளக்கும் வீட்டுக்காரர்;

அவள்,

வெகுண்டெழுந்து கத்துகிறாள்:

"என்னை ஏதோ கடித்துவிட்டதே!"

கையோடு,

மூர்க்கத்தனமாய்

பாவாடையை உலுப்பி

விளக்கை அணைத்து விடுகிறாள்!                                                                          

­Amarushataka, translated from Sanskrit into English by Andrew Schelling, Erotic Love Poems from India, Shambhala, London, 2004, Poem 86

தமிழ்: மணி வேலுப்பிள்ளை, 2012-03-15.

No comments:

Post a Comment