உண்மையான அமைதி

DISCOVERING TRUE PEACE THROUGH

SINCERE RECONCILIATION
J. Cabazares (Filippino Poet)

Talk to us about reconciliation
Only if you first experience
The anger of our dying
Talk to us of reconciliation
If your living is not the cause
Of our dying
Talk to us about reconciliation
Only if your words are not the product
of your devious scheme
To silence our struggle for freedom
Talk to us about reconciliation
Only if your intention is not to entrench yourself
More on your throne
Talk to us about reconciliation
Only if you cease to appropriate
all the symbols and meanings of our struggle.

உளமார்ந்த மீளிணக்கம் ஊடாக
உண்மையான அமைதி காணல்
ஜே. கபசரேஸ் (பிலிப்பினோ கவிஞர்)

முதலில்,
எங்கள் மாள்வின் சீற்றத்தை
நீங்கள் பட்டறிந்தால் மாத்திரமே
மீண்டும் இணக்கம் பற்றி
எங்களுடன் பேசுங்கள்.
உங்கள் வாழ்வு
எங்கள் மாள்வில்
தங்கியிருக்கவில்லை
என்றால் மாத்திரமே
மீண்டும் இணக்கம் பற்றி
எங்களுடன் பேசுங்கள்.
உங்கள் சொற்கள்
எங்கள் சுதந்திரப் போராட்டத்தை
ஒடுக்கும் சூழ்ச்சியின்
வெளிப்பாடுகள் அல்ல  
என்றால் மாத்திரமே
மீண்டும் இணக்கம் பற்றி
எங்களுடன் பேசுங்கள்.
உங்கள் அரியணையில்
மேன்மேலும் உங்களை
நிலைநிறுத்தப் போவதில்லை
என்றால் மாத்திரமே
மீண்டும் இணக்கம் பற்றி
எங்களுடன் பேசுங்கள்.
எங்கள் போராட்டத்தின்
அர்த்தங்கள், சின்னங்கள்
அனைத்தையும் அபகரிப்பதை  
நிறுத்திக்கொண்டால் மாத்திரமே
மீண்டும் இணக்கம் பற்றி
எங்களுடன் பேசுங்கள்.

J. Cabazares, Discovering true peace through sincere reconciliation
தமிழ்: மணி வேலுப்பிள்ளை

No comments:

Post a Comment