புண்படும் தமிழ்மொழி

“இசை வெறும் ஓசையாய் மாறிவிட்டதே!” என்று புலம்பினார் எழுத்தாளர் மைலன் குந்தேரா. பொருள்பொதிந்த தமிழ்ப் பெயர்கள் கூட வெறும் ஓசைகளாய் மாறிவிட்டனவே என்று நாமும் புலம்ப வேண்டியுள்ளது.

எமது குழந்தைகளுக்கு வைக்கப்படும் பெயர்கள் பெரிதும் கிரந்த எழுத்துக்களுடன் கூடிய ஓசைகளாய் ஒலிக்கின்றன. ஜதுமிதா, ஷொகினா, ஹம்ஷிகா, ஜிதாரா, நிஹாரிஜன், டுலக்‌ஷன், ஜிரஷ்டன்…

மரபார்ந்த தமிழறிவு குன்றியதால், கிரந்த எழுத்துகளுடன் கூடிய ஓசைகள் எம்மவர்க்கு சிறந்த பெயர்களாகத் தென்படுகின்றன போலும். அவை தமிழும் இல்லை, அவற்றில் பொருளும் இல்லை, சுவையும் இல்லை.

கடைகள் எல்லாம் “ஸ்டோர்ஸ்” ஆகிப் பல்லாண்டுகள் கழிந்துவிட்டன. இன்று எந்தக் கடையுமே “கடை” எனப்படுவதில்லை. “கடை” ஒரு கடைகெட்ட சொல்லாக ஒதுக்கித் தள்ளப்பட்டுவிட்டது!

கடைகளின் பெயர்கள் 99 விழுக்காடு கிரந்த எழுத்துக்களில் அல்லது ஆங்கிலத்தில் தான் வைக்கப்படுகின்றன. ஆங்காங்கே  அவை தமிழில் ஒலிபெயர்த்து எழுதப்படுவதுண்டு.   

ஒரு விடுதியில் “Sivagangai Aham” என்றும், அதன் கீழே “சிவகங்கை அஹம்” என்றும் பொறிக்கப்பட்டுள்ளது. “அகம்” எனும் தூய தமிழ்ச் சொல் கிரந்த எழுத்துடன் “அஹம்” என்று  எழுதப்பட்டுள்ளது!

ஆங்கிலத்தில் வைக்கப்படும், பதியப்படும், பொறிக்கப்படும் பெயர்கள் பிறகு தாறுமாறாகத் தமிழில் ஒலிபெயர்க்கப்படுகின்றன: “கந்தன் சுப்பர் மார்க்கட், பஷன் அக்கடமி,  மொடெர்ன் போட்டோகிராபர்ஸ், “நியூ ஷூ பலஸ்…”

வாடிக்கையாளர்கள்  தங்கி, உண்டு, உறங்கிச் செல்லும் விடுதி “விடுதியகம்.” பெரிதும் குடிவகை பருகும் வசதியுடன் கூடிய விடுதி “அருந்தகம்.”

 விடுதியகம்              = hotel

அருந்தகம்                 = inn = pub                              

உணவகம்                 = restaurant

சிற்றுண்டியகம்         = cafeteria

“சலூன்” என்பது அசல் தமிழ்ச் சொல்லாகவே வழங்கி வருகிறது. ஆங்கிலத்தில் salon என்பது “சலோன்” என உச்சரிக்கப்படுவது.  தமிழில் இதை “சிகையகம்” எனலாம்.

தமிழகம் எங்கும் “பேருந்து நிலையம்” என்று சரிவரப் பொறிக்கப்பட்டுள்ளது. இலங்கை பேருந்து நிலையங்களில் “பேரூந்து” நிலையம் என்றே பொறிக்கப்பட்டுள்ளது. தமிழ்ப் பேரகராதியின்படி “ஊந்து” என்பது ஏலக்காய்க் கோது. பேரூந்து என்றால் பெரிய ஏலக்காய்க் கோது! 

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது “ஆசனம்,” “அக்கிராசனர் உரை” பற்றிக் குறிப்பிடுவார்கள். 1970களில் வெளிவந்த இலங்கை அரச  சொற்கோவைகளில் “ஆசனம்” என்பது “இருக்கை” எனவும், “அக்கிராசனர் உரை” என்பது “அரியணை உரை” எனவும் தமிழ்ப்படுத்தப்படுள்ளன.

பெரிதும் நாடாளுமன்றத்தில் கையாளப்படும் expenditure எனும் சொல்லை ஊடகங்கள் பலவும் “செலவீனம்” என்று குறிப்பிட்டு வருகின்றன. ஆட்சிமொழித் திணைக்களத்து சொற்கோவையின்படி இது “செலவினம்” ஆகும். 

பல்வேறு செலவுகள் ஒருமிக்க “செலவினம்” எனப்படும். செலவுக்கும், செலவினத்துக்கும் இடையே உள்ள வேறுபாடு அது. பலவீனம் என்றால் பலம் இல்லை. ஆகவே செலவீனம் என்றால் செலவு இல்லை அல்லவோ?

“நிலைமை”, “நிலைவரம்” “சுயேச்சை”, “பயிற்சி”... என சரிவர எழுத்துக்கூட்டாமல், “நிலமை”, “நிலவரம்”, “சுயேட்சை”, “பயிர்ச்சி” ... என்று வழுபட எழுத்துக்கூட்டும் வழக்கு மேலோங்கி வருகிறது.   

“நாடகர்”, “நூலகர்”, “ஊடகர்”... எனப்படுவோர் தத்தம் துறைகளில் பயின்று பட்டம் பெற்றிருந்தால் ஒழிய, அவர்களை முறையே ”நாடகவியலாளர்”, “நூலகவியலாளர்”, “ஊடகவியலாளர்” எனக் கொள்வது பொருந்தாது. 

“காணாமல் ஆக்கப்படல்” எனும் தொடர் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. முன்பின் முரண்பாடான இத்தொடர் அறவே பொருந்தாது.  “காணாமல் போக்கடித்தல்”  என்பதே பொருத்தமான தொடர். 

ஒரு பிணக்கு ஏற்பட்ட பிறகு, மீண்டும் இணக்கம் ஏற்படுவது reconciliation எனப்படுகிறது. இதை “மீளிணக்கம்” என்பது பொருந்தும். “நல்லிணக்கம்” என்பதில் “மீண்டும்” என்பது அடங்கவில்லை.

An intellectual என்பது பெரிதும் “ஒரு புத்திஜீவி” என்று குறிப்பிடப்படுகிறது.  இது ஓர் அஃறிணைச் சொல் போல் ஒலிக்கிறது. சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம்-தமிழ்ச் சொற்களஞ்சியத்தில் இது “ஆய்வறிவாளர்” என்று பெயர்க்கப்பட்டுள்ளது. “அறிவார்ந்தோர்” என்பதும் பொருந்தும்.

Test match என்பது இரு நாடுகளின் தேசிய விளையாட்டு அணிகளுக்கு இடையே நிகழும்  போட்டி. இதை “நாட்டிடை விளையாட்டுப் போட்டி” எனலாம். Test cricket match என்பது “நாட்டிடைத் துடுப்பாட்டப் போட்டி.” 

“சாட்சிகள் அழிக்கப்படுகின்றனவா?” எனும் வினாவுடன் கூடிய ஒரு செய்தித் தலைப்பு! “சாட்சிகள்” (witnesses) உயர்திணை; “அழிக்கப்படுகின்றனவா?” அஃறிணை. “சான்றுகள்” (evidence) அழிக்கப்படுகின்றனவா?” என்பதே சரி. (ஆங்கிலத்தில் evidence, information போன்ற சொற்கள் பன்மையில் அமைவதில்லை.)

“சாட்சி” அல்லது “கண்கண்ட சாட்சி” (eye-witness) ஓர் ஆளைக் குறிப்பது. அவர் நீதிமன்றில் அளிப்பது “சாட்சியம்”  (testimony). He testified in Court அல்லது He gave evidence in Court என்றால், “அவர் நீதிமன்றில் சாட்சியம் அளித்தார்” என்று பொருள்படும். 

“ஐயின்னா ஒரு பொல்லாத விலங்கு.” Hyena! இந்த விலங்கிற்கு பல தமிழ்ப் பெயர்கள் இருக்கின்றன: கழுதைப்புலி, கடுவாய், குடத்தி, வங்கு… அவற்றை அறிந்து பயன்படுத்தாமல், “ஐயின்னா” என்று எழுதுவது பொறுப்பீனம்! 

Conservative Party என்பது “பழமைவாதக் கட்சி” என்று குறிப்பிடப்பட்டு வருகிறது.  Conserve என்பது “பேணு” என்று பொருள்படுவது. ஆதலால் இலங்கை ஆட்சிமொழிச் சொற்கோவைகளிலும், கல்வி வெளியீட்டுத் திணைக்களத்து மொழிபெயர்ப்பு நூல்களிலும் இது “பழமைபேண் கட்சி” என்று பெயர்க்கப்பட்டு வந்தது.  கனடியக் கட்சிகளுள் ஒன்றாகிய Progressive Conservative Party தமிழில் “முற்போக்கு பழமைபேண் கட்சி” ஆகும். அதை “முற்போக்கு பழமைவாதக் கட்சி” என்பது முன்பின் முரணாகும். 

“அம்மாவும் அப்பாவும் சந்தைக்குப் போனார்கள்” என்று தமிழில் கொடுக்கப்படும் வசனத்தை எனது மாணவர்கள், Mom and dad went to the market, என்று சரிவர மொழிபெயர்க்கிறார்கள். 

Mom and dad went to the market என்ற அதே வசனத்தை திருப்பி ஆங்கிலத்தில் கொடுத்தால், அதே மாணவர்கள், “அம்மா மற்றும் அப்பா சந்தைக்குப் போனார்கள்” என்று மொழிபெயர்க்கிறார்கள்! 

“அம்மாவும் அப்பாவும்” என்ற உம்மைத்தொடரை விடுத்து, and-ஐ “மற்றும்” என்று பெயர்த்து, “அம்மா மற்றும் அப்பா…” என்றும், “இலங்கையும் இந்தியாவும்” என்பதை “இலங்கை மற்றும் இந்தியா” என்றும்  மொழிபெயர்க்கிறார்கள்!

“அவரிற்கும் இவரிற்கும்”, “விருந்தினர்களிற்கும் மற்றவர்களிற்கும்!” என்று மொழியை வதைக்கும் போக்கு மேலோங்கி வருகிறது. “அவருக்கும் இவருக்கும்”, “விருந்தினர்களுக்கும் மற்றவர்களுக்கும்” என்று இலகுவாக எழுதலாமே!

“தமிழர்களிற்கு ஒற்றையாட்சி தீர்வாகுமா?” என்ற வினாவை எழுப்பி, அதற்கு விடையளிக்கும் ஒரு கட்டுரை!. “தமிழருக்கு…” என்றே எழுதலாம். “அர்” விகுதி ஒருமையையும், ஆண்பாலையும் மட்டுமல்ல, பன்மையையும், பெண்பாலையும் குறிக்கும். “தமிழர்”, “தமிழரின்”, “தமிழரால்”, “தமிழருக்கு”... என்றே எழுதலாம்.

“இந்நாடு, இந்த நாடு, அம்மாகாணம், அந்த மாகாணம் …” என்பதெல்லாம் சிலருக்கு சரியாகப் படவில்லை. “இவ்நாடு, அவ்மாகாணம்…” என்று தப்பும் தவறுமாக எழுதுவதே அவர்களுக்கு சரியாகப் படுகிறது! 

“இலங்கையில் ஆயுதங்களைக் களஞ்சியப்படுத்த இந்தியாவுடன் உடன்பாடு” என்பது ஒரு செய்தித்தலைப்பு. “களஞ்சியம்” தானியங்க்ளுக்குப் பொருந்தும்; படைக்கலங்களுக்குப் பொருந்தாது. “படைக்கலங்களைச் சேர்த்து அல்லது சேமித்து அல்லது குவித்து வைக்க …” என்று குறிப்பிடலாமே! 

“புலம்பெயர்ந்த ஈழத்தமிழரை மகிழ்ச்சிப்படுத்தி வடக்கு-கிழக்கு வாக்குகளைச் சூறையாட அரசாங்கம் சூழ்ச்சி” என்பது இன்னொரு செய்தி. “மகிழ்வி” எனும் பிறவினையை விடுத்து, “மகிழ்ச்சி” எனும் பெயரை எதற்காக வினையுருவமாக்கி, “மகிழ்ச்சிப்படுத்து” என்று குறிப்பிட வேண்டும்? “…தமிழரை மகிழ்வித்து…” என்று எழுதக் கூடாதா?

அவ்வாறே ஓர் ஆய்வுக் கட்டுரையில், “மொழிபெயர்ப்புச் செய்தல்” என்று திரும்பத் திரும்பக் குறிப்பிடப்பட்டுள்ளது! ஒரு தடவையேனும் “மொழிபெயர்த்தல்” என்று குறிபிடப்படவில்லை. 

“பாடசாலைச் சீருடைகளின் தேவையை முழுமையாக வழங்கிய சீன அரசாங்கம்” எனுந் தலைப்பில் ஒரு செய்தி. “பாடசாலைக்குத் தேவையான சீருடைகளை முழுமையாக வழங்கிய சீன அரசாங்கம்” எனலாமே!

“நிலத்தைப் பதப்படுத்திய விவசாயிகள் கைதுசெய்யப்பட்டார்கள்” என்பது ஒரு தொலைக்காட்சிச் செய்தி. “நிலத்தைப் பண்படுத்திய விவசாயிகள்” என்பதே மரபார்ந்த தமிழ். 

அதே தொலைக்காட்சியில் “செய்திச்சாரம்” ஒளிபரப்பாகி வருகிறது. “சாரம்” எனும் சொல் கரு, சாறு, பிழிவு… என்று பொருள்படுவது. இது பெரிதும் ஒருமையில், ஒரு செய்தியைக் குறித்துப் பயன்படுத்தப்படுவது.

“சரம்” என்ற சொல் கணை, வடம், மாலை… என்பவற்றைக் குறிப்பது. இது பெரிதும் பன்மையில், ஒன்றுக்கு மேற்பட்ட செய்திகளைக் குறித்துப்  பயன்படுத்தப்படுவது. “செய்திச்சரம்” என்பதே பொருத்தம்.  

Busy-க்குத் தமிழ் தேடி அலையாதோர் இல்லை. அதற்குத் தமிழ் இல்லை என்று இடித்துரைப்போரும் இருக்கிறார்கள். Busy எனும் சொல்லை அறியமுன்னர் எமது முன்னோர் படுசோம்பேறிகளாய் இருந்தார்கள் போலும்!

“அலுவலாயிருத்தல், காரியமாயிருத்தல், கவையாயிருத்தல்” மூன்றும் தமிழ்ப் பேரகராதியில் இடம்பெற்றுள்ளன! “அப்பா ஓர் அலுவலாய் இருக்கிறார்” என்பதே Dad is busy எனப்படுகிறது. எனக்கு அதிக வேலைகள் இருக்கின்றன = I have a busy schedule. 

Oxford அகராதியில் order எனும் சொல் 16 விதங்களில் எடுத்தாளப்பட்டுள்ளது. அவற்றுள் “உத்தரவு” அல்லது “கட்டளை” என்பது ஒரு விதம் மட்டுமே. அரசாங்கம் அல்லது நீதிமன்றம் பிறப்பிப்பது “கட்டளை” என்பது எல்லோர்க்கும் தெரியும்.

ஒரு தேநீர்க் கடையில் அமர்ந்து தேநீர் கொண்டுவரச் சொல்வது  “கட்டளை” அல்ல, “வேண்டுகோள்.” அங்கே தேநீர் கொண்டுவரும்படி வேண்டிக்கொள்கிறோம் அல்லது கேட்டுக்கொள்கிறோம். “நாங்கள் தேநீர் கொண்டுவரச் சொன்னோம்” என்றாலே போதுமே! இதுவே ஆங்கிலத்தில்  We ordered tea. 

Mayor-ஐ "மாநகராதிபதி" அல்லது "மாநகர முதல்வர்"  என்று குறிப்பிட்ட நெடுங்கால வழக்கு அருகிவிட்டது. இன்று மாநகராதிபதிகளாக விளங்குவோர் அந்த வழக்கிற்குப் புத்துயிரூட்ட வேண்டும்.

“கெளரவி” எனும் வடமொழிச் சொல்லை சிலர் “மதிப்பளி” என தமிழ்ப்படுத்துகிறார்கள். “மறவர் கெளரவிக்கப்பட்டனர்” என்பதை அவர்கள் “மறவர் மதிப்பளிக்கப்பட்டனர்”  என்கிறார்கள். 

அதை “மறவருக்கு மதிப்பளிக்கப்பட்டது” என்றாவது செப்பனிடலாமே! உண்மையில் “கெளரவி” (to honour) என்பது “மாண்புறுத்து” என்று பொருள்படுவது. “மறவர் மாண்புறுத்தப்பட்டனர்” என்பதே மரபார்ந்த தமிழ்.  

மாண்பு = honour (பெயர்)

மாண்புமிகு = honourable (பெயரடை)

மாண்புறுத்து = honour (வினை)

Honour killing என்பது “ஆணவக்கொலை” எனப்படுகிறது. குடும்ப மானம் காக்கவே கொலைசெய்வதாக குடும்பத்தவர்கள் தெரிவிக்கிறார்கள். அப்படி என்றால், இது “மானக்கொலை”  ஆகிறது. ஆணவக்கொலை என்பது எந்தக் கொலைக்கும் பொருந்தும் அல்லவா?

“யாழ்ப்பாணம் - பாசையூரில் மறைந்த தென்னிந்திய பழம் பெரும் புரட்சி நடிகரும் தமிழக முதலமைச்சருமான வைத்தியர் எம்.ஜீ.இராமசந்திரனின் 108 வது ஜனனதின நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை (17)  நடைபெற்றது.”

“மறைந்த பழம்பெரும் புரட்சி நடிகரும், தமிழக முதலமைச்சருமான எம். ஜி. இராமசந்திரனின் 108 வது ஜனனதின நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை (17)  “யாழ்ப்பாணம் - பாசையூரில் நடைபெற்றது” என்று குறிப்பிட்டிருக்கலாம். 

அண்ணாத்துரை, கருணாநிதி, எம். ஜி. ஆர்., ஜெயலலிதா ஆகியோருக்கு honorary doctorate பட்டம் அளிக்கப்பட்டது. இது கெளரவ கலாநிதிப் பட்டம். Dr. MGR  என்பது கெளரவ கலாநிதி எம். ஜி. ஆர்., “வைத்தியர் எம். ஜி. ஆர்.” அல்ல.

…ஹிருணிகா பிரேமசந்திரன், நானும் ஹிரனும் தங்கள் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிய முடிவு செய்துள்ளதாக, தன்னுடைய முகப்புத்தகத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்… என்கிறது ஒரு நாளேடு. 

ஹிருணிகா… என்று பிறர்கூற்றில் துவங்கும் வசனம் மேற்கோட்குறி இல்லாமல்  நானும்…  என்று தற்கூற்றுக்கு மாறி, பிறகு தங்கள்… என்று பிறர்கூற்றுக்கு மீள்கிறது! 

ஹிரனும் நானும் எங்கள் திருமணத்திலிருந்து பிரிக்க முடிவு செய்துள்ளோம் என்று தொடர்கிறது செய்தி. ஒன்றில், “எங்கள் திருமணத்திலிருந்து பிரிய முடிவு செய்துள்ளோம்” என்று, அல்லது “எங்களை திருமணத்திலிருந்து பிரிக்க முடிவு செய்துள்ளோம்” என்றாவது குறிப்பிட்டிருக்கலாம். 

வேறு ஊடகங்களும் இதே செய்தியை வெளியிட்டுள்ளன. அவை அனைத்தும் “திருமணம்”, “மணவாழ்வு” இரண்டையும் குழப்பியடித்துள்ளன. Marriage “திருமணம்” என்றும் “மணவாழ்வு” என்றும் பொருள்பட வல்லது. A happy marriage என்பது பெரிதும் “இனிய மணவாழ்வு” என்று பொருள்படும். 

அதேவேளை, give in marriage என்பது “மணம்முடித்துக் கொடு” (marry off) என்று பொருள்படும். Our teacher doesn’t believe in marriage என்பது “எங்கள் ஆசிரியருக்கு மணவாழ்வில் நம்பிக்கை இல்லை” என்று பொருள்படும்.

ஹிருணிகாவின் முகநூற் குறிப்பில் உள்ள the life of our dreams எனும் தொடர் “எங்கள் கனவு வாழ்க்கை”, “நம் கனவுகளின் வாழ்க்கை”, “எங்கள் கனவுகளின் வாழ்க்கை”... என்றெல்லாம் பெயர்க்கப்பட்டுள்ளது. 

இந்த அரிய தொடரை “நாம் கனவுகண்ட வாழ்வு” என்றோ, “நாங்கள் கனவுகண்ட வாழ்க்கை” என்றோ எளிதாகவும், சரியாகவும், தெளிவாகவும் பெயர்த்திருக்கலாமே! 

“ஒரு பிரச்சனை ஏற்பட்டதற்கான காரணம் பற்றிய புரிதல் இல்லாமல் அந்தப் பிரச்சனையைத் தீர்க்க முடியாது.” இவ்வாறு பலரும் "புரிதல்" பற்றிக் குறிப்பிடுகிறார்கள்.

“ஒரு பிரச்சனை ஏற்பட்டதற்கான காரணம் புரியாமல்” அல்லது  “காரணத்தைப் புரிந்துகொள்ளாமல் அந்தப் பிரச்சனையைத் தீர்க்க முடியாது” எனலாமே! 

“இந்த விமானம் ஆளில்லா விமானம் என்பதுடன் இந்த வகை விமானம் 2020 ஆம் ஆண்டிலேயே கண்டுபிடிக்கப்பட்டதாகவும் சுமார் 40 கிலோ எடையுடையது என்றும் விமானத்தில் வெடிபொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப் படவில்லை என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.”.

இப்படிப்பட்ட வசனங்களை வாசித்துப் பழகிய எங்களுக்கு, இது சரிவர எழுதப்பட்டுள்ளது என்றே தோன்றும். உரிய விபரம் எமக்குப் புரிவதே அதற்கான காரணம்.

அதாவது: இது ஆளில்லா விமானம்; இந்த வகை விமானம் 2020 ஆம் ஆண்டிலேயே கண்டுபிடிக்கப்பட்டது; இது சுமார் 40 கிலோ எடையுடையது; இந்த விமானத்தில் வெடிபொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை; இந்த விபரம் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது!

எனினும், மேற்படி வசனத்தில் “...என்பதுடன்…ஆகவும்… என்றும்… என… “ ஆகிய இணைப்புச் சொற்கள் ஒன்றுடன் ஒன்று இயைபுபடுத்தப்படவில்லை. அவற்றை இயைபுபடுத்தாமல் எழுதும் போக்கு மேலோங்கி வருகிறது. 

இன்னும் மோசமான வசனம்: “நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டிடத்தில் ஏறி நின்று வேலை செய்த இரும்பிலான பலாஞ்சியில் மீது மின்சாரம் பாய்ந்ததில் அதனை தூக்கிச் சென்ற 4 பேர் மீது மின்சாரம் தாக்கியுள்ளது.”

எனினும் சங்கதி புரிகிறது: ஒரு கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது; 4 பேர் கட்டிடத்தில் ஏறிநின்று வேலை செய்தார்கள்; அவர்கள்  இரும்புப் பலாஞ்சி ஒன்றை தூக்கிச் சென்றார்கள்; அதில் மின்சாரம் பாய்ந்து அவர்களைத் தாக்கியது.

இது ஒரு செய்தித்தலைப்பு: “Populationல் சரியும் South India, எகிறும் North, TNக்கு காத்திருக்கும் ஆபத்தை விளக்கும் Jeyaranjan”! பிட்டும் தேங்காய்ப்பூவும் போல் தமிழும் ஆங்கிலமும்! இப்பொழுது பரவிவரும் கொள்ளைநோய் இது! 

“பருப்பில் நமக்கேன் வெருப்பு?” என்பது ஒரு கட்டுரையின் தலைப்பு! அதற்கு யார் “பொருப்பு” என்பது தெரியவில்லை! இனிமேல் “அரம் செய விரும்பு, ஆருவது சினம்…” என்றெல்லாம் எழுதுவார்கள் போலும்!

“பேன்சிபூக்கடை” தென்பட்டது. அதனை அணுகி, “பேன்சீப்புக்கடை என்று சரிவர எழுத்துக்கூட்டி எழுதலாமே!” என்றேன். “ஐயா, இது Fancy Florists எண்டது உங்களுக்கு விளங்கேல்லையோ?” என்று சீறினார் முதலாளி!

“வாட்டப்பம்…” கண்ணில் பட்டது. பாலப்பம், வெள்ளையப்பத்துடன் “வாட்டப்பம்” என ஒன்று சேர்ந்துவிட்டது என்ற எண்ணத்துடன் நகர்ந்தபொழுது, அது “...வாடகைக்கு விடப்படும்” என்று நீண்டது! 

Water pump என்பது பாமரமக்கள் வாயில் “வாட்டப்பம்” என்றே ஒலிக்கும். “வாடகைக்கு விடப்படும்” என்ற தொடர்ச்சியே அது அப்பம் அல்ல நீர் இறைக்கும் இயந்திரம் என்பதை உணர்த்தியது!

இலங்கையிலிருந்து (பெரிதும் புலம்பெயர்ந்த மக்களைக் கருத்தில் கொண்டு) ஏற்றுமதி செய்யப்படும் ஒரு பால்மா பேணியின் புறத்தில் இப்படி பொறிக்கப்பட்டுள்ளது:

“திறந்த பின்பு, பால்மாவைக் காற்றுப் புகாத கொள்கலனில் இட்டு மூடி வைக்கவும்.” அதன் ஆங்கில வரி: After opening, please keep the tin tightly closed. “பேணியைத் திறந்தால், அதை இறுக்கி மூடி வைக்கவும்” என்பதே அதன் பொருள். 

"அமெரிக்காவின் சகோதரிகள் மற்றும் சகோதரர்களே!' என்று அவையோரை விளித்து சுவாமி விவேகானந்தர் சிக்காகோவில் உரையாற்றியதாக ஒரு பேர்போன ஊடகம் குறிப்பிட்டுள்ளது. விவேகானந்தரின் அரும்பெரும் உரைக்கு நேர்ந்த கதி அது. 

"அமெரிக்காவின் சகோதரிகள்..." என்றால், அவர்கள் அமெரிக்கர்கள் அல்லர் என்பது கருத்து. அமெரிக்கரையே அவர் Sisters and brothers of America!" என விளித்து, அதாவது "அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே!" என விளித்து உரையாற்றினார். 

“நினைவுகூறுவது” பற்றி திரும்பத் திரும்ப ஊடகங்கள் பலவும் எழுதி வருகின்றன. அது சரியல்ல. “தகுதிகூர்வு, தயவுகூர்வு” போன்றதே, “நினைவுகூர்வு.” “நினைவுகூருவது” என்பதே சரி.

பேச்சு வழக்கில் “இலங்கை” என்பதை விட “சிறிலங்கா” என்பதே காதில் விழுவது அதிகம். எழுத்து வழக்கிற்கும் “சிறிலங்கா” பரவிவிட்டது. சில ஒலி-ஒளி ஊடகங்கள் “இலங்கை” என்று சொல்வதே இல்லை.   

“கடல்சூழ் இலங்கைக் கயவாகு வேந்தன்…” என்கிறது சிலப்பதிகாரம். அதுவே நாட்டின் அதிகாரபூர்வமான தமிழ்ப் பெயர். 16ம் நூற்றாண்டு வரை சிங்களத்தில் வழங்கிய “லங்கா”, பிறகு 1972 வரை ஆங்கிலத்தில் வழங்கிய “சிலோன்”, அதன்பிறகு வழங்கிவரும் “சிறிலங்கா” எல்லாம் “இலங்கை” என்று மட்டுமே பெயரும். 

Lanka Cement = இலங்கை சீமெந்து

Bank of Ceylon = இலங்கை வங்கி

Sri Lanka Freedom Party = இலங்கை சுதந்திரக் கட்சி

“நபரொருவரை தாக்கி பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்ட இருவர் கைது” என்பது ஒரு செய்தி. “நபர்” எனும் உருதுமொழிச் சொல்லின் பொருள் “ஆள்.”  அதன்படி “நபர் ஒருவர்” என்றால், ஆள் ஒருவர். “ஒருவர்” என்றாலே ஓர் ஆள் தானே! “ஒருவரை…” என்று குறிப்பிடக் கூடாதா? 

“சென்னையில் எந்திரத்தை ஏமாற்றி ஏடிஎம் கொள்ளை” என வேறொரு செய்தி. ஏ-டி-எம் (ATM) தான் அந்த எந்திரம். எனவே “ஏ-டி-எம் எந்திரத்தை…” என்பதே பொருந்தும். ஒருவரை ஏமாற்றலாம்; எந்திரத்தை ஏமாற்ற முடியாது, மோசடி செய்யலாம். “சென்னையில் தன்னியக்க வங்கிப் பொறி மோசடிக் கொள்ளை” என்றோ, என்ற விதமாகவோ குறிப்பிட்டிருக்கலாம்.

“காயப்படுத்து” எனும் சொல் ஒருவரின் “உள்ளத்தை ஊறுபடுத்து” எனும் பொருள்பட புனைவெழுத்துக்களில் கூட இடம்பிடித்துவிட்து. அதன்படி இக்கட்டுரைக்கு “காயப்படும் தமிழ்மொழி” என்றுதான் தலைப்பிட வேண்டும்! 

மரபார்ந்த தமிழில் “புண்படுத்து” என்பது பெரிதும் ஒருவரின் “உள்ளத்தை ஊறுபடுத்து” என்று பொருள்படும்; அது அவரை “அடித்துக் காயப்படுத்து” என்று பொருள்படல் அரிது.

Arjuna Bakery-யினுள் புகுந்து கேட்டேன்:

தம்பி, ஒரு சோடி சீனியப்பம் தாடா!” 

“ஐயா, சீனியப்பம் எண்டால் என்ன?” 

“உதுதான்!” என்று சொல்லி, சுட்டிக்காட்டினேன். 

“இது டீ பன்” (tea bun), ஐயா! ஏன் பேரை மாத்தி, குழப்புறீங்கள்?” என்று முகம் சுழித்தான் பையன். 

“அட, நீங்கள் எல்லோ சீனியப்பத்தை “டீ பன்” எண்டு மாத்திப் போட்டீங்கள்” என்று பொருமினேன். 

பையன் என்னைப் புறக்கணித்துவிட்டு, அடுத்த வாடிக்கையாளரை வரவேற்றான். 

“ஒரு குழல் பிட்டு!” கட்டித்தரும்படி பக்கத்து உணவகத்தில் கேட்டேன்.

“எத்தினை, ஐயா?” 

“ஒரு குழலில் எத்தனை அவிப்பியளோ, அத்தனை!”

“நாலு.”

“அதைத்தான் ஒரு குழல் பிட்டு எண்டு சொன்னேன்.”

“அதை ஒரு லைன் (line) பிட்டு எண்டுதான், ஐயா, சொல்லுறது.”

ஒரு பலகாரக் கடையினுள் நுழைந்து கேட்டேன்:

“தம்பி, ஒரு கலவைச் சரை தாடா!” 

“கலவைச் சரையோ?”

“உதுதான்ரா!” 

“இது மிக்சர், ஐயா!”

“அதைத்தான் தமிழில் சொன்னேன்!”

“ஏன், மிக்சர் தமிழ் இல்லையோ?”

“வாறனடா, தம்பி!”

இத்தகைய மொழிவதை தமிழ்கூறு நல்லுலகு முழுவதும் இடம்பெற்று வருகிறது. உலகளாவிய தமிழ் ஊடகங்கள் அதை முன்னேடுத்துச் செல்கின்றன. ஆதலால்,  ஒருபுறம் வளங்கொழிக்கும் அதே தமிழ்மொழி, மறுபுறம் புண்பட்டு வருகிறது. 

அதேவேளை, தமிழை விரும்பியவாறு பயன்படுத்தும் உரிமை எவர்க்கும் உன்டு. பெயர்களையும் விளம்பரங்களையும் விரும்பியவாறு வைத்துக்கொள்ளும் உரிமையும் எவர்க்கும் உண்டு.

ஆங்கில, கிரந்த எழுத்துக்களை இடைச்செருகி, மொழியமைதியை மீறுவதற்கும் உரிமையுண்டு. மீறினால், அதை எதிர்கொள்வதற்கு இன்று பாண்டியனும் இல்லை, மதுரை தமிழ்ச் சங்கமும் இல்லை!

ஆதலால், தமிழை இயன்றளவு சரிவரப் பயன்படுத்தும்படியும், அதை தாறுமாறாகப் பயன்படுத்துவதை இயன்றளவு தவிர்த்துக் கொள்ளும்படியும்   வேண்டுகோள் மட்டுமே விடுக்க முடியும்.

மணி வேலுப்பிள்ளை, 2024-2025.

 


1 comment:

  • RiffathSeptember 7, 2025 at 11:41 AM
    பல விடயங்களை சுவையாகப் பகிர்ந்துள்ளீர்கள் ஆசான்! நானும் எனது தமிழை மரபார்ந்த முறையில் பிரயோகிப்பதற்கும் எழுதுவதற்கும் முயன்று வருகின்றேன். எனினும் ஒழுங்கமைந்த தமிழை வாசித்து, படித்து, ஆய்ந்து கற்றுக்கொள்வதற்கான தளங்கள், ஊடகங்கள் எவை என்று கண்டறிவது பாரிய சவாலாக அமைந்துள்ளது. ஏனெனில் மரபார்ந்த மொழிநடை அருகிவிட்டது.


 

Citizenship, Devolution, Land & Language: 

The Vicarious Legacies of 

SJV Chelvanayakam

Rajan Philips

SJV Chelvanayakam, the founder leader of the Ilankai Thamil Arasu Kadchi, aka Ceylon Tamil Federal Party, passed away 49 years ago on 26 April 1977. There were events in Sri Lanka and other parts of the world where Tamils live, to commemorate his memory and his contributions to Tamil society and politics. His legacy is most remembered for his espousal of the cause of federalism and his commitment to pursuing it solely through non-violent politics. Chelvanayakam’s political life spanned a full thirty years from his first election as MP for Kankesanthurai in 1947 until his death in 1977.

Under the rubric of federalism, Chelvanayakam formulated what he called the four basic demands of the Tamil speaking people, a political appellation he coined to encompass – the Sri Lankan Tamils, Sri Lankan Muslims and the hill country Tamils (Malaiyaka Tamils). The four demands included the restoration of the citizenship rights of the hill country Tamils; cessation of state sponsored land colonisation in the North and East; parity of status for the Sinhala and Tamil languages; and a system of regional autonomy to devolve power to the northern and eastern provinces.


1957: B-C Pact Signed

High-minded Politics

Although the four basic demands that Chelvanayakam articulated were not directly delivered upon during his lifetime, they became part of the country’s political discourse and dynamic to such an extent that they had to be dealt with, one way or another, even after his death. So, we can call these posthumous developments as Chelvanayakam’s vicarious legacies. There is more to his legacy. He belonged to a category of Sri Lankans, Sinhalese, Tamils and Muslims, who took to politics, public life, public service, and even private business with a measure of high-mindedness that was almost temperamental and not at all contrived. Chelvanayakam personified high-mindedness in politics. But he was not the only one. There were quite a few others in the 20th century. There have not been many since.           

Born on 31 March 1898, Chelvanayakam was 49 years old when he entered parliament. He was not an upstart school dropout dashing into politics or coming straight out of the university, or even a hereditary claimant, but a self-made man, an accomplished lawyer, a King’s Counsel, later Queen’s Counsel, and was widely regarded as one of the finest civil lawyers of his generation. He was a serious man who took to politics seriously. Howard Wriggins, in his classic 1960 book, “Ceylon: Dilemmas of a New Nation”, called Chelvanayakam “the earnest Christian lawyer.”

Chelvanayakam’s professional standing, calm demeanour, his personal qualities of sincerity and honesty, and his friendships with men of the  calibre of Sir Edward Jayatilleke KC (Chief Justice, 1950-52), H.V. Perera QC, P. Navaratnarajah, QC, and K.C. Thangarajah, were integral to his politics. The four of them were also mutual friends of Prime Minister SWRD Bandaranaike and they played a part in the celebrated consociational achievement in 1957, called the B-C Pact.

Chelvanayakam effortlessly combined elite consociationalism with grass roots politics and mass movements. He led the Federal Party both as a democratic organization and an open movement. Chelvanayakam and the Federal Party used parliament as their forum to present their case, the courts to fight for their rights, and took to organizing non-violent protests, political pilgrimages and satyagraha campaigns. He was imprisoned in Batticaloa, detained in Panagoda, and was placed under house arrest several times. His Alfred House Gardens neighbours in Colombo used to wonder why the government and the police were after him, of all people, and why wouldn’t they do something about his four boisterous, but studious, sons!

He was a rare politician who filed his own election petition when he was defeated in the 1952 election, his first as the leader of the Federal Party, and was rewarded with punitive damages by an exacting judge. He had to borrow money from Sir Edward Jayatilleke to pay damages. The common practice for losing candidates was to file vexatious petitions in the name of one of their supporters with no asset to pay legal costs. Chelvanayakam was too much of a principled man for that. As a matter of a different principle, the two old Left parties never challenged election losses in court, but Dr. Colvin R de Silva singled out Chelvanayakam’s uniqueness for praise in parliament, in the course of a debate on amendments to the country’s election laws in 1968.   

Disenfranchisement & Disintegration

Although he became an MP in 1947, Chelvanayakam had been associated with GG Ponnambalam and the Tamil Congress Party for a number of years. GG was the flamboyant frontliner, SJV the quiet mainstay behind. Tamil politics at that time was all about representation. In fact, all politics in Sri Lanka has been all about representation all the time. It started when British colonial rulers began nominating local (Sinhala, Tamil, Muslim) representatives to quasi legislative bodies, and it became a contentious political matter after the introduction of universal franchise in 1931.

Communal representation was conveniently made to look ugly by those who themselves were politically communal. Indeed, under colonial rule, if not later too, Sri Lankans were a schizophrenic society where most Sinhalese, Tamils and Muslims were socially friendly, but politically communal. The underlying premise to the fight over representation was that  British colonialists were not leaving in a hurry and they were there to stay and rule for a long time. Hence the jostling for positions under a foreign master. It was in this context that Ponnambalam made his celebrated 50-50 pitch for balanced representation between the Sinhalese, on the one hand, and all the others – Tamils, Muslims, Indian Tamils – combined on the other. It was a perfectly rational proposition, but it was also perfectly poor politics.

But independence came far too sooner than expected. The Soulbury Constitution was set up not for a continuing colonial state, but as the constitution for an independent new Ceylon. So, the argument for balanced representation became irrelevant in the new circumstances. The new Soulbury Constitution was enacted in 1945, general elections were held in 1947, a new parliament was elected, and Ceylon became independent in 1948. SJV Chelvanayakam was among the seven Tamil Congress MPs elected to the first parliament led by GG Ponnambalam. The Tamil Congress campaigned in the 1947 election against accepting the Soulbury Constitution and for a vaguely formulated mandate “to cooperate with any progressive Sinhalese party which would grant the Tamil their due rights.” But what these rights are was not specified. In a 5th Feb 1946 speech in Jaffna, Ponnambalam specifically proposed “responsive cooperation between the communities” – not parties – and advocated “a social welfare policy” to benefit not only the poor masses of Tamils but also the large masses of the Sinhalese.

So, when Ponnambalam and four of the seven Tamil Congress MPs decided to join the government of DS Senanayake with Ponnambalam accepting the portfolio of the Minister of Industries, Industrial Research and Fisheries, they were opposed by Chelvanayakam and two other Tamil Congress MPs. The immediate context for this split was the Citizenship question that arose soon after independence when DS Senanayake’s UNP government introduced the Ceylon Citizenship Bill in parliament. The purpose and effect of the bill was to deprive the estate Tamils of Indian origin (then numbering about 780,000) of their citizenship. Previously the government had got parliament to enact the Elections Act to stipulate that only citizens can vote in national elections. In one stroke, the whole working population of the plantations was disenfranchised.

GG Ponnambalam and all seven Tamil Congress MPs voted against the two bills. Joining them in opposition were the six MPs from the Ceylon Indian Congress representing the Malaiyaka Tamils and 18 Sinhalese MPs from the Left Parties. The Citizenship Bill was passed in Parliament on 20 August 1948. Ponnambalam called it a dark day for Ceylon and accused Senanayake of racism. But less than a month later, on 3 September 1948, he joined the Senanayake cabinet as a prominent minister and the government’s principal defender in parliamentary debates. Dr. NM Perera once called Ponnambalam the UNP government’s “devil’s advocate from Jaffna.”

Chelvanayakam remained in the opposition with two of his Congress colleagues. A little over an year later, on 18 December 1949, Chelvanayakam founded the Ilankai Tamil Arasu Kadchi, Federal Party in English. Not long after, joining Chelvanayakam in the opposition was SWRD Bandaranaike, who broke away from the UNP government over succession differences and went on to form another new political party, the Sri Lanka Freedom Party. As was his wont as a Marxist to see trends and patterns in politics, Hector Abhyavardhana saw the breakaways of Chelvanayakam and Bandaranaike, as well as the emergence of Thondaman as the leader of the disenfranchised hill country Tamils, as symptoms of a disintegrating society as it was transitioning from colonial rule to independence.

Abhayavardhana saw the Citizenship Act as the political trigger of this disintegration in the course of which “what was set up for the purpose of a future nation ended in caricature as a Sinhalese state.”  Chelvanayakam may have agreed with this assessment even though he was located at the right end of the ideological continuum. “Ideologically, SJV is to the right of JR,” was part of political gossip in the old days. He saw “seeds of communism” in Philip Gunawardena’s Paddy Lands Act. For all their differences, Chelvanayakam and Ponnambalam were united in one respect – as unrepentant opponents of Marxism.    

The Four Demands

Chelvanayakam had his work cut out as the leader of a new political party and pitting himself against a formidable political foe like Ponnambalam with all the ministerial resources at his disposal. Chelvanayakam may not have quite seen it that way. Rather, he saw his role as a matter of moral duty to fill the vacuum created by what he believed to be Ponnambalam’s betrayal, and to provide new leadership to a people who were at the crossroads of uncertainty after the unexpectedly early arrival of independence.

He set about his work by expanding his political constituency to include not only the island’s indigenous Tamils, but also the Muslims and the Tamil plantation workers from South India – as the island’s Tamil speaking people. It was he who vigorously introduced the disenfranchised Indian Tamils as hill country Tamils. In the aftermath of the Citizenship Act and disenfranchisement, restoring their citizenship rights became an obvious first demand for the new Party.   

Having learnt the lesson from Ponnambalam’s failed 50-50 demand, Chelvanayakam territorialized the representation question by identifying the northern and eastern provinces as “traditional Tamil homelands,” and adding a measure of regional autonomy to make up for the shortfall in representation at the national level in Colombo. To territorialization and autonomy, he added the cessation of state sponsored land colonization, especially in the eastern province. Chelvanayakam and the Federal Party painstakingly explained that they were by no means opposed to Sinhalese voluntarily living in Tamil areas, either as a matter of choice, pursuing business or as government and private sector employees, but the nuancing was quite easily lost in the political shouting match.

The fourth demand, after citizenship, regional autonomy, and land, was about language. Language was not an issue when Chelvanayakam started the Federal Party. But he pessimistically predicted that sooner or later the then prevailing consensus, based on a State Council resolution, over equality between the two languages would be broken. He was proved right, sooner than later, and language became the explosive question in the 1956 election. As it turned out, the UNP government was thrown out, SWRD Bandaranaike lead a coalition of parties to victory and government in the south, while SJV Chelvanayakam won a majority of the seats in the North and East, including two Muslims from Kalmunai and Pottuvil.                

After the passage of the Sinhala Only Act on 5 June 1956, the Federal Party launched a political pilgrimage and mobilized a convention that was held in Trincomalee in the month of August. The four basic demands were concretized at the convention, viz., citizenship restoration for the hill country Tamils, parity of status for the Sinhala and Tamil languages, the cessation of state sponsored land colonization, and a system of regional autonomy in the Northern and Eastern Provinces.

The four demands became the basis for the Bandaranaike-Chelvanayakam agreement – the B-C Pact of 1957, and again the agreement between SJV Chelvanayakam and Dudley Senanayake in 1965. The B-C Pact was abrogated by Prime Minister Bandaranaike under political duress but was not abandoned by him. The D-C Pact has been implemented in fits and starts.

The two agreements which should have been constitutionally enshrined, were severely ignored in the making of the 1972 Constitution and the 1978 Constitution – with the latter learning nothing and forgetting everything that its predecessor had inadvertently precipitated. The political precipitation was the rise of Tamil separatism and its companion, Tamil political violence. Ironically, Tamil separatism and violence created the incentive to resolve what Chelvanayakam had formulated and non-violently pursued as the four basic demands of the Tamils.

After his death in 1977, the citizenship question has been resolved. The 13th Amendment to the 1978 Constitution that was enacted in 1987 resolved the language question both in law and to an appreciable measure in practice. The same amendment also brought about the system of provincial councils, substantially fulfilling the regional autonomy demand of SJV Chelvanayakam. The resolution of the citizenship question and the establishment of provincial councils have brought significant political benefits to the hill country Tamils who are now officially recognized as Malaiyaka Tamils in all three languages.

Muslims have become a political force with their own political parties and territorial significance in the Eastern Province and the Mannar District. The concept of Tamil speaking people is still not irrelevant, but the reality is also that the Muslims and the Malaiyaka Tamils are emerging as Sri Lanka’s trilingual communities. On the other hand, the concept of traditional Tamil homelands is somewhat depleted in proportion to the sizeable Tamil diaspora. The land question itself has taken a different turn with state sponsored land colonisation in the east giving way to government security forces sequestering private residential properties of Tamil families in the north, especially in the Jaffna Peninsula. It is now 17 years since the war ended and the displaced Tamils are still waiting to return to their lands from which they were evicted.

The future of the Provincial Council system is also becoming uncertain with the extended postponement of provincial elections by four Presidents and their governments, including the current incumbents. The provinces are now being administered by the President through handpicked governors without the elected provincial councils as mandated by the constitution. Imagine a Sri Lanka where there is only an Executive President and no parliament – not even a nameboard one. What horror! You would say. But that is the microcosmic reality today in the country’s nine provinces.

Rajan Philips, Citizenship, Devolution, Land & Language: The Vicarious Legacies Of SJV Chelvanayakam, Colombo Telegraph, 2026-05-10.

 

Sixteen Years Without Answers: The Unfinished Fight For Justice In The Prageeth Ekneligoda Case

Dr. Lionel Bopage

After 16 years of legal battles, witness intimidation, and broken promises, the disappearance of Sri Lankan journalist Prageeth Ekneligoda remains unsolved. It is a sobering reminder of the impunity that still plagues Sri Lanka’s human rights and press freedom. His wife Sandya Ekneligoda continues to face abuse and death threats, even under the current government. The most recent threat was reported to have been made by someone identified as a retired army major. It is not just a terrible act, it is also an attack on the self-respect of a woman and a victim.

On January 24, 2010, Sri Lankan journalist and cartoonist Prageeth Ekneligoda disappeared without a trace. Sixteen years later, Sandya Ekneligoda continues her relentless quest for truth, navigating a justice system plagued by delays, intimidation, and institutional resistance. As the anniversary of his enforced disappearance passes once again in 2026, the case stands as a painful emblem of Sri Lanka’s ongoing struggle with accountability and press freedom.

Trapped in Legal Limbo

The trial against nine military intelligence officers accused in Ekneligoda’s disappearance continues to inch forward at a glacial pace. Among the accused is Retired Brigadier Shammi Kumararatne, former commanding officer of the Giritale Army Camp[1], where witnesses reported seeing Prageeth after his abduction. Yet despite years of proceedings before a Permanent Trial-at-Bar, a verdict remains frustratingly out of reach.

Prageeth

The current phase of the trial focuses on analysing circumstantial evidence, including phone records and witness testimonies. That could finally piece together what happened to Prageeth after he vanished in broad daylight. Former Criminal Investigation Department Director Shani Abeysekara, who led the original investigation, has been designated as the 109th witness of the trial. That is a crucial addition that advocates hope would bring fresh momentum to the case.

However, repeated postponements have characterised the proceedings throughout late 2025 and into 2026. The three-judge bench has faced persistent vacancies. Hearings have been deferred for months at a time. Judicial appointments languished in bureaucratic limbo. For Sandya Ekneligoda, who has fought this battle for 16 years, each delay compounds the agony of not knowing her husband’s fate.

The statement that the hope that existed by the end of 2024 has been shattered by the end of 2025 reflects the frustration expressed by those close to the case. It is unfortunate that the appointment of judges to vacant judicial posts is delayed for six or seven months even when Rajapaksas are not in power.

Shadows of Intimidation

Perhaps no factor has undermined the pursuit of justice more than the systematic intimidation of witnesses. Key witnesses have recanted their testimonies or simply failed to appear in court. Their silence speaks volumes about the climate of fear surrounding this case. The pattern of intimidation runs so deep that even the accused have been implicated in attempting to silence those who dare to speak.

In June 2025, Shammi Kumararatne himself was briefly remanded for allegedly threatening a witness. It refers to a brazen act that highlights how those accused of disappearing a journalist feel emboldened to obstruct justice openly. For witnesses who might provide crucial testimony about what happened at the Giritale military camp, the message is clear. That is cooperation comes with personal risk.

This atmosphere of intimidation extends beyond individual threats. The Sri Lankan Army has historically withheld information about the case, citing national security concerns whenever pressed for details. The military’s wall of silence has made it nearly impossible to establish what happened to Prageeth after witnesses last saw him at the military installation.

Promises Made and Promises Broken

The election of President Anura Kumara Dissanayake in September 2024 initially sparked renewed hope among human rights advocates and Prageeth’s family. The new administration, led by the National People’s Power, pledged to expedite long-unsolved cases of political abductions and killings. For a brief moment, it seemed justice might finally be within reach. However, that hope proved short-lived.

In January 2026, the same government that promised accountability reportedly promoted T.E.R. (Erantha) Peiris, a suspect in the Eknaligoda case, to the rank of Colonel. The promotion has sent shockwaves through the human rights community and drew sharp criticism from international observers. How could a government claim to seek justice while simultaneously advancing the military careers of those accused of making a journalist disappear?

This contradiction mirrors patterns from previous administrations. Under former President Gotabaya Rajapaksa, a Commission of Inquiry into Political Victimisation went to the extent of recommending the acquittal of all nine accused officers. International observers condemned that move as a deliberate attempt to derail the investigation. The fact that such recommendations could be made with impunity reveals the depth of institutional resistance to accountability in cases involving military personnel.

International Spotlight

The Ekneligoda case has become emblematic of Sri Lanka’s broader struggles with press freedom and human rights. As of 2025, Sri Lanka ranks 150th out of 180 countries in the World Press Freedom Index. It is a dismal position that reflects the dangerous environment journalists face in the country.

International organisations have not remained silent. Reporters Without Borders and Amnesty International continue to apply pressure, calling for concrete reforms that would make justice possible. The United Nations Human Rights Council extended the mandate of the Office of the High Commissioner for Human Rights on Sri Lanka for two years in October 2025, specifically to monitor accountability for past crimes like Prageeth’s disappearance.

These international watchdogs have identified three critical needs for achieving closure in the Eknaligoda case: witness protection, full disclosure, and judicial continuity. Effective mechanisms must be established to shield those testifying against military personnel from intimidation and retaliation. Without such protections, the truth will remain buried beneath layers of fear.

The military must be held accountable for fully disclosing Prageeth’s whereabouts after he was seen at the Giritale military camp. National security cannot be used as a perpetual shield for human rights violations. Additionally, the Special High Court bench must remain fully staffed to prevent the tactical delays that have characterised this case. That is because justice deferred, is justice denied. The chronic vacancies on the bench serve no purpose but obstruction.

A Wife’s Unwavering Determination

Throughout these 16 years of legal battles, broken promises, and institutional resistance, Sandya Ekneligoda has remained steadfast. Her public campaign for justice has kept her husband’s case in the national consciousness, refusing to let his disappearance fade into the background of Sri Lanka’s troubled history.

“Prageeth’s case needs to be concluded and soon. I think I have a right to make this request,” she has stated with dignified determination. Her words carry the weight of nearly two decades she spent seeking answers, navigating a system that seems designed to exhaust rather than deliver justice.

Sandya’s fight is not just about a single person’s disappearance. It is about whether Sri Lanka can break free from its culture of impunity, whether military personnel can be held accountable for crimes against civilians, and whether journalists can work without fear of being silenced permanently.

The Urgent Need for Closure

January 24, 2026, marks 16 years since the forced disappearance of Prageeth Eknaligeda. The need for conclusion of his case has never been a more urgent task. A transparent and impartial final verdict is not just a legal formality. It is also a moral imperative for a society seeking to move beyond its authoritarian past.

The obstacles are formidable, with witness intimidation, institutional resistance, contradictory government actions, and a military that continues to protect its own. Yet these challenges cannot be allowed to prevent justice indefinitely. The question facing Sri Lanka is whether this case will join countless other disappearances that remain forever unsolved, or whether the country will finally demonstrate that no one is above the law, regardless of rank or uniform.

For Sandya Ekneligoda and for everyone who believes in press freedom and human rights, the answer to that question will define Sri Lanka’s future as much as its past. Sixteen years is more than long enough time to wait for justice. Now is the time to arrive at a final conclusion (Lionel Bapage, The Colombo Telegraph, 2026-01-19)